சென்னையில் தங்கம் விலை இன்று பவுனுக்கு ரூ. 360 குறைந்துள்ளது.

தொழில்துறை தேக்கத்தைத் தொடர்ந்து உலகம் முழுவதுமே முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடுகளின் பக்கம் திரும்பினர். பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என மற்ற பலவற்றில் இருந்த முதலீடுகளையும் மாற்றித் தங்கத்தில் முதலீடு செய்யத் தொடங்கினர்.


இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்து, அதன் விலை கணிசமாக உயர்ந்து வந்தது. கரோனா வைரஸ் பாதிப்பால் தொழில்துறை தேக்கம் குறித்த பீதி நிலவி வரும் நிலையில், தங்கம் விலையில் ஏற்ற இறக்கங்கள் நிலவி வந்தன.


இதற்கிடையே 2021-22ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் தங்கம், வெள்ளிப் பொருட்களின் மீதான வரி குறைக்கப்பட்டது. இதன் பிறகு தங்கம் விலை ஏற்றம் - இறக்கமாகவே உள்ளது. இந்தநிலையில் தங்கத்தின் விலை இன்று குறைந்துள்ளது.



ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.45 குறைந்து ரூ.4450-க்கு விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ.360 குறைந்து ரூ.35600-க்கு விற்பனையாகிறது. இதேபோல் 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.38472-க்கு விற்பனையாகிறது.


வெள்ளி விலை


வெள்ளியின் விலை 1 கிராம் வெள்ளி விலை 60 பைசா உயர்ந்து ரூ.73.60க்கு விற்பனையாகிறது. அதேபோல 1 கிலோ வெள்ளியின் விலை இன்று ரூ.73,600 ஆக உள்ளது.

Post a Comment

Previous Post Next Post