மிகவும் அத்தியாவசியமான அடையாள ஆவணமாக உள்ள பான் கார்டுகள் அரசு தரப்பில் கட்டாயமாக்கப்பட்ட ஆவணமாக உள்ளன. அவற்றை அமர்ந்த இடத்தில் இருந்துகொண்டே எளிதாக எப்படி வாங்குவது என்று பார்க்கலாம்...



பான் கார்டு!

பான் அல்லது நிரந்தர கணக்கு எண் என்பது பத்து இலக்கங்கள் கொண்ட தனிநபர் அடையாளமாகும். இது இந்திய வருமான வரித் துறையால் அட்டை வடிவில் வழங்கப்படுகிறது. அனைத்து பணப் பரிவர்த்தனைகளுக்கும் அவசியம் என்பதால் வரி செலுத்துவோருக்கு பான் கார்டுகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன. உங்களது வங்கிக் கணக்கில் பணம் வந்து போவதைக் கண்காணிக்க இது உதவுகிறது. பான் கார்டுகளை ஆதார் எண்களுடன் இணைப்பதையும் மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது.



ஆன்லைனில் நீங்களே விண்ணப்பிக்கலாம்!

UTITSL போர்ட்டலை ஓப்பன் செய்யவும்.

Click Here

முகப்புப் பக்கத்தை அடைந்ததும் பக்கத்தின் அடிப்பகுதியில் Apply for new PAN card (Form49AA) என்பதை கிளிக் செய்யவும். அதன் பின்னர் 49AA படிவும் உங்களது திரையில் தோன்றும்.



கொடுக்கப்பட்ட அறிவுறுத்தல்களின்படி படிவத்தை முழுமையாக நிரப்பவும். இந்த படிவத்தின் அடிப்பகுதியில் வழங்கப்பட்ட இடத்தில் கேப்ட்சா விவரங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கவும்.


பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவம் திரையில் தெரிந்தவுடன் சமர்ப்பிக்கப்படும் தகவலின் சரியான தன்மையை விண்ணப்பதாரர் சரிபார்க்க வேண்டும்.


சரிபார்ப்பிற்குப் பிறகு 'Make Payment' என்பதைக் கிளிக் செய்வதன் மூலம் ஆன்லைனில் பணம் செலுத்தலாம்.


கட்டணம் செலுத்துதல் 'Success' ஆனவுடன் ஒப்புதல் கிடைத்துவிடும். அதன் பின்னர் நீங்கள் அந்தப் படிவத்தை ’save’ அல்லது ’print out’ எடுக்கலாம்.

ஆன்லைனில் பான் கார்டுக்கு விண்ணப்பிப்பது மிகவும் எளிதானது. புதிய கார்டு வாங்குவது மட்டுமல்லாமல் நீங்கள் உங்களது பான் அட்டையில் உள்ள விவரங்களை மாற்றவோ அல்லது திருத்தம் செய்யவோ முடியும். ஏற்கனவே இருக்கும் பான் எண்ணுக்கு புதிய பான் அட்டையை நீங்கள் மறுபதிப்பும் செய்யலாம். பான் கார்டு பெறுவதற்கு நீங்கள் NSDL அல்லது UTIITSL போர்டல்கள் மூலமாகவோ ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.



Post a Comment

Previous Post Next Post