தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், மாநிலம் முழுவதும் 16,284 பேருந்துகள் இயக்கப்பட்டன. இதில் மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் 2,790 பேருந்துகள் இயக்ககப்பட்டு வருகிறது. அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் 345 பேருந்துகள் இயக்கப்பட்டன.


80 சதவீதம் பேருந்துகள் இரவில் இயக்கப்பட வேண்டிய பேருந்துகள் முன்னுரிமை அடிப்படையில் பகல் நேரங்களில் மாற்றி இயக்கப்படுகின்றன. பணிமனையில் இருந்து புறப்படும் பேருந்துகள் சுத்தம் செய்யப்பட்டு பயணிகள் சேவைக்கு பயன்படுத்தப்படுகிறது.


இரவு நேர ஊரடங்கால், பேருந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக போக்குவரத்து கழகங்களுக்கு சராசரியாக நாள் ஒன்றுக்கு 12 கோடி ரூபாய் முதல் 15 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டு வருகிறது. நோய் பரவலைத் தடுப்பதற்காக நின்று கொண்டு பய


ணிக்க கூடாது என்பதால் அலுவலக நேரங்களில் கூடுதலாக பேருந்துகள் இயக்கப்படுகிறன.


இரவு நேர ஊரடங்கால் விரைவு போக்குவரத்து கழகம்தான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான போக்குவரத்து கழகங்களில் இரவு 11 மணியுடன் சேவையை நிறைவு செய்துவிடுவார்கள் என்பதால் 10 சதவீதம் மட்டுமே பாதிப்பு இருக்கிறது.

Post a Comment

Previous Post Next Post