கடந்த சில நாட்களாகவே பல்வேறு வாட்ஸ்அப் குழுக்களிலும் பிங்க் வாட்ஸ்அப் பை டவுன்லோடு செய்யுங்கள் என்று கூறி, லிங்க் ஒன்று வைரலாக பரவி வருகிறது.



வாட்சப் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வெளியீடு என்றும் அதன் புதிய அப்டேட் வெர்ஷன் என்றும் குறிப்பிட்டு வரும் இந்த லிங்க்குகளைத் தொட்டாலே, நமது செல்போனில் இருக்கும் அனைத்து குழுக்களுக்கும் பரவி விடுவதாகக் கூறப்படுகிறது.


அதனை நம்பி அந்த செயலியை பதிவிறக்கம் செய்தால், புதுவகை வைரஸ் பரவி, செல்போன்களில் இருக்கும் புகைப்படங்கள், வீடியோக்கள், இன்னபிற முக்கிய தகவல்கள் திருடப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 


அதனை உறுதி செய்யும் சைபர் கிரைம் நிபுணர்கள், எக்காரணம் கொண்டும் பிங்க் வாட்சப் என்று கூறி வரும் லிங்க்குகளைத் தொட வேண்டம் என எச்சரிக்கின்றனர்.


பொதுவாக லிங்க்குகள் வழியே வரும் செயலிகளை தரவிறக்கம் செய்யக்கூடாது என்று எச்சரிக்கும் சைபர் கிரைம் நிபுணர்கள், கூகுள் பிளே ஸ்டோரிலோ, ஆப்பிள் ஸ்டோரிலோ கிடைக்கும் செயலிகளை மட்டுமே தரவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்ய வேண்டும் என்றும் கூறுகின்றனர்.


எனவே "Pink WhatsApp " என்ற பெயரில் அல்லது வேறு ஏதேனும் பெயரில் Appகளை பதிவிறக்கம் செய்யுமாறு Link கள் கிடைக்கப் பெற்றால் அவற்றை பயன்படுத்தவோ மற்றவர்களுக்கு பகிரவோ வேண்டாம் என்றும் உங்கள் தொலைபேசி HACK செய்யப்பட்டு தகவல்கள் அனைத்தும் திருடப்பட்ட கூடும் எனவும் சென்னை அடையாறு துணை ஆணையர் விக்ரமன் டிவிட்டர் மூலம் எச்சரித்துள்ளார்.

Post a Comment

Previous Post Next Post