பப்ஜியில் விளையாட்டிற்கு அடிமையானது மட்டுமின்றி அதில் வரும் எதிரிகளை சுட்டு வீழ்த்துவதாக கருதி தனது வீட்டில் உள்ள இருவரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.



பாகிஸ்தானில் உள்ள லாகூர் பகுதியில் திடீரென துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்கவும் அருகில் இருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். உடனடியாக அங்கு விரைந்த போலீசார் துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்த இருவரது உடலை கைப்பற்றியதுடன், காயமடைந்த மூவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறுதியாக துப்பாக்கிச்சூடு நடத்திய நபரையும் கைது செய்தனர். பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியானது.



லாகூரில் வசித்து வந்த பிலால் என்ற இளைஞருக்கு மதுப்பழக்கம் இருந்த நிலையில் எப்பொழுதும் பப்ஜி விளையாடுவதை வழக்கமாக கொண்டு வந்துள்ளான். பிலால் பப்ஜி விளையாடுவதை நிறுத்துமாறு வீட்டில் உள்ளவர்கள் கண்டித்தும் அதனை கேட்காமல் தொடர்ந்து கேம் விளையாடுவதிலேயே பிலால் ஆர்வம் காட்டி வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வீட்டில் அனைவரும் இருக்க திடீரென தலையில் ஜெல்மெட், புல்லட் புரூஃப் ஜாக்கெட் போன்ற ஆடைகளை அணிந்தபடி கையில் துப்பாக்கியுடன் அதாவது பப்ஜி கேமில் இருப்பது போன்று தனது அறையில் இருந்து வெளியே வந்த பிலால் வீட்டில் இருந்தவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட ஆரம்பித்தான்.



வீட்டில் இருந்தவர்களை எதிரிகளாக நினைத்து பிலால் சுட அவரது உறவினர்கள் இருவர் துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்தனர். பிலாலின் தாய், சகோதரன் மற்றும் நண்பர் காயங்களுடன் வீட்டிலிருந்து வெளியே தப்பி ஓடினர். தொடர்ந்து பப்ஜி கேம் விளையாடியதால் ஏற்பட்ட மனநோய் காரணமாக தானும் அதில் வரும் ஒரு வீரராக நினைத்து வீட்டில் இருந்தவர்களை பிலால் சுட்டு வீழ்த்த அப்பகுதியினர் அச்சத்தில் உறைந்தனர். பின்னர் பிலாலை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.



Post a Comment

Previous Post Next Post