Redmi 9A Buying Link :Click Here


ரெட்மி 9ஏ ஸ்மார்ட்போனின் அம்சங்கள்:



ரெட்மி 9ஏ ஸ்மார்ட்போன் 6.53 இன்ச் எச்டி+ ஐபிஎஸ் டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. இது 1600 x 720 பிக்சல்கள் என்கிற திரை தெளிவுத்திறன் மற்றும் 20: 9 அளவிலான திரை விகிதத்துடன் வருகிறது. 


இந்த ஸ்மார்ட்போன் 2GHz ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி 25 ப்ராசஸர் உடனாக IMG PowerVR GE8320 GPU உடன் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் உள்ளது, இதை மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் வழியாக 512 ஜிபி வரை விரிவாக்க முடியும். 


ரெட்மி 9ஏ ஸ்மார்ட்போன் ஒரு பெரிய 5,000 எம்ஏஎச் பேட்டரியால் சக்தியூட்டப்படுகிறது. மேலும் இது ஐஆர் பிளாஸ்டர், யூ.எஸ்.பி-சி போர்ட் மற்றும் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவையும் கொண்டுள்ளது. இதில் கைரேகை ரீடர் இல்லைஎன்பது குறிப்பிடத்தக்கது.


கேமரத்துறையை பொறுத்தவரை ரெட்மி 9ஏ ஸ்மார்ட்போன் ஆனது ஒரு 13 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் 5 மெகாபிக்சல் செல்பீ ஷூட்டரைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 அடிப்படையிலான MIUI 11 கொண்டு இயங்குகிறது. இது MIUI 12 க்கு மேம்படுத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. 


இணைப்பு அம்சங்களை பொறுத்தவரை, இது டூயல் 4G VoLTE, Wi-Fi 802.11 802.11 b / g / n, ப்ளூடூத் 5, ஜி.பி.எஸ் + க்ளோனாஸ் மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி ஆகியவைகளை கொண்டுள்ளது

Post a Comment

Previous Post Next Post