ஜகமே தந்திரம் திரைப்படத்தை தொடர்ந்து கர்ணன் படப்பிடிப்பையும் முடித்து கொடுத்துள்ளார் தனுஷ்.  மொத்த படக்குழுவின் உதவியுடன் கோலாகலமாக இன்று தொடங்கியுள்ளது. தற்காலிகமாக தனுஷ் 43 என தலைப்பிடப்பட்ட இந்த திரைப்படத்தில் தனுஷ் கதாநாயகனாக நடிக்க மாளவிகா மோகனன் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். துருவங்கள் பதினாறு திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமான இளம் இயக்குனர் கார்த்திக் நரேன் இந்த திரைப்படத்தை இயக்க உள்ள நிலையில் .


இதுவரை கார்த்திக் இயக்கிய திரைப்படங்கள் அனைத்தும் முழுக்க முழுக்க திரில்லர் திரைப்படங்களாக இருந்ததால் தனுஷ் 43ம் திரில்லர் படமாக இருக்குமோ என ரசிகர்கள் சந்தித்து வருகின்றனர். இதைப்பற்றி அப்டேட்கள் திடீர் திடீர் என படக்குழு அறிவித்து வரும் நிலையில் பிரபல பாடலாசிரியர் விவேக் முதன்முறையாக திரைக்கதை ஆசிரியராக இந்த திரைப்படத்தில் அறிமுகமாக இருக்க வசனமும் இவரே எழுதுகிறார்.


இப்படி இந்த திரைப்படத்துக்கான பலம் மேலும் கூடிக்கொண்டே போக புதிதாக மூக்குத்தி அம்மன் திரைப்படத்தில் நடித்த பிரபல நடிகை ஒருவரும் இதில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். நடிகர் அருண் விஜய்யின் மிரட்டலான நடிப்பில் உருவாகியிருந்த தடம் திரைப்படத்தை இயக்குனரும் நடிகருமான மகிழ்திருமேனி இயக்கி இருக்க முதல் முறையாக அருண் விஜய் இரண்டு கதாபாத்திரத்தில் கலக்கிய தடம் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று பாக்ஸ் ஆபீஸையும் தெறிக்க விட்டு இப்போது தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டு நடிகர் ராம் இதில் ஹீரோவாக நடித்து வருகிறார்.


மேலும் தடம் திரைப்படத்தில் அமைதியான பெண் வேடத்தில் இரண்டாம் கதாநாயகியாக சம்ருதி வெங்கட் அறிமுகப்படுத்தப்பட்டு இருந்த நிலையில், இதை தொடர்ந்து சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற மூக்குத்தி அம்மன் திரைப்படத்தில் ஹீரோவின் மூன்று தங்கைகளில் மூத்த தங்கை தெய்வாமிரதம் என்ற கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்திருப்பார். இவ்வாறு தனுஷ் 43 படக்குழுவின் முக்கிய நடிகர் நடிகைகளின் .


பெயர்கள் ஒவ்வொன்றாக வெளியிடப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தி வந்த இயக்குனர் கார்த்திக் நரேன், இதன் முதல் நாள் படப்பிடிப்பை கோலாகலமாக பூஜையுடன் இன்று தொடங்கி இருக்கிறார். பூஜையில் தனுஷ், மாளவிகா மோகனன், ஜி வி பிரகாஷ், சம்ருதி வெங்கட், பாடலாசிரியர் விவேக் மற்றும் தயாரிப்புக் குழு என அனைவரும் கலந்துகொள்ள ஷூட்டிங் தடபுடலாக ஆரம்பிக்கப்பட்டு அடுத்த மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post